ஊத்துக்கோட்டை அருகே வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு


ஊத்துக்கோட்டை அருகே வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 5 Dec 2021 7:03 PM IST (Updated: 5 Dec 2021 7:03 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டை அருகே வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் வீடு வீடாக சென்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார்.

வாந்தி, மயக்கம்

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரன்டூர் ஊராட்சிக்குட்பட்ட பேரன்டூர் பெரியகாலனியில் 200-க்கு மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர்.

இந்த கிராமத்திலுள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு குளத்து பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் சேமித்து வைக்கப்படும். இந்த தண்ணீர் குழாய்கள் மூலம் கிராம மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. சில நாட்களாக பெய்த பலத்த மழை காரணமாக குளம் நிரம்பி வழிகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை அந்த பகுதியில் வசிக்கும் 22 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் ஊத்துக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தேங்கி நின்ற மழை வெள்ளம் கலந்த குடிநீர் பருகியதால் 22 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்தநிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நேற்று நேரில் சென்று நலம் விசாரித்தார்.

மேலும் பெரியகாலனியில் வீடு வீடாக சென்று ஆய்வு செய்தார். அந்த பகுதியிலுள்ள நீர்த்தேக்க தொட்டியையும், அதில் குளோரினேசன் செய்யப்படும் அளவு குறித்து ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ஜவஹர்லால், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ஸ்டாலின், வட்டார மருத்துவ அலுவலர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story