கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது


கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 5 Dec 2021 7:52 PM IST (Updated: 5 Dec 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்றதாக 3 வாலிபர்கள் கைது

குடியாத்தம்

குடியாத்தத்தை அடுத்த ராஜாகோவில் பகுதியில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று காலை ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் சிறு பொட்டலங்களாக கஞ்சா வைத்திருந்த ராஜாகோயில் காலனி பகுதியை சேர்ந்த பூபதி (வயது 21), தட்சணாமூர்த்தி (22), மனோஜ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story