மண்சாலை சிமெண்டு சாலையாக மாற்றப்படுமா?
மண்சாலை சிமெண்டு சாலையாக மாற்றப்படுமா?
கூடலூர்
கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட 11-வது வார்டு பகுதியில் உள்ளது, முறம்பிழாவு கிராமம். இங்கு பழங்குடியின குடும்பத்தினர் உள்பட 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கோட்டை கடவு என்ற இடத்தில் இருந்து செல்லும் சுமார் 150 மீட்டர் தூர சாலை இதுவரை செப்பனிடப்படாத நிலையில் மண் சாலையாகவே உள்ளது.
இதனை சிமெண்டு சாலையாக சீரமைத்து தர கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. இதனால் மழைக்காலத்தில் மண் சாலை வழுக்கும் தன்மை உடையதாக மாறிவிடுகிறது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
Related Tags :
Next Story