சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு


சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு
x
தினத்தந்தி 5 Dec 2021 7:53 PM IST (Updated: 5 Dec 2021 7:53 PM IST)
t-max-icont-min-icon

சிறுமியை திருமணம் செய்த சிறுவன் மீது போக்சோ வழக்கு

பந்தலூர்

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 14 வயது சிறுமிக்கும், 16 வயது சிறுவனுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இது தொடர்பாக சமூக நலத்துறை மற்றும் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி தலைமையிலான போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது சிறுமிக்கும், சிறுவனுக்கும் திருமணம் நடந்தது உறுதியானது.

 உடனே அந்த சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவன் கோவையில் உள்ள ஒரு விடுதியிலும், சிறுமி மீட்கப்பட்டு ஊட்டியில் உள்ள ஒரு விடுதியிலும் போலீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story