குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி


குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி
x
தினத்தந்தி 5 Dec 2021 9:32 PM IST (Updated: 5 Dec 2021 9:32 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது.

நெமிலி

நெமிலி அருகே குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி நடந்தது.

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த பள்ளூர் பகுதியில் மழை மற்றும் ஆற்று வெள்ளத்தால் திருமால்பூர் ெரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் அதிக அளவில் மழைநீர் தேங்கியிருந்தது. 

அதன் அருகில் செல்லும் ஆற்றுக் கால்வாயில் இருந்து அதிக தண்ணீர் தாழ்வான குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்ததால் 30 மேற்பட்ட குடும்பத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். 

தகவல் அறிந்ததும் நெமிலி ஒன்றிய குழு தலைவர் வடிவேலு மற்றும் அரக்கோணம் தாசில்தார் நடராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். 

இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் நீர்ப்பிடிப்பு பகுதியில் குடியிருந்து வருவது கண்டறியப்பட்டது.

பின்னர் அவர்களுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

 ெரயில்வே மேம்பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் மற்றும் குடியிருப்பு பகுதியில் உள்ள மழைநீரை டீசல் என்ஜின் மூலம் வெளியேற்றும் பணியை ஊராட்சி மன்ற தலைவர் மேற்கொண்டு வருகிறார். 

Next Story