தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகளை நேரில் ஆய்வு செய்தார்
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகளை நேரில் ஆய்வு செய்தார்
தூத்துக்குடி:
மழை வெள்ளத்தால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் உள்ள உறை கிணறுகளை நேரில் ஆய்வு செய்தார்.
இணை நிர்வாக இயக்குனர்
நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் குடிநீர் வினியோகம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரதீப் குமார் நெல்லைக்கு வந்தார்.
அவர் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் உறைகிணறுகள், நீரேற்றும் பணிகளின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தார்.
மங்கலகுறிச்சி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம் மற்றும் உடன்குடி பேரூராட்சிகளுக்கும் மற்றும் 321 குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் கூட்டுக்குடிநீர் திட்ட தலைமைப்பகுதி, சுனாமியால் பாதிப்படைந்த 113 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் தலைமை இடங்களான ஆத்தூர், மங்கலகுறிச்சி, பொன்னன்குறிச்சி ஆகிய இடங்களுக்கு சென்று பார்வையிட்டார்.
உறைகிணறுகள், மின்சார ஒயர்கள், குழாய்கள் மற்றும் மின்மோட்டார்கள் சேதம் பற்றி ஆய்வு செய்து, சீரமைப்பு பணிகளை விரைவாக செய்து பொது மக்களுக்கு குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 76 கிராமங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தில் 637 கிராமங்களுக்கு குடிநீர் எடுக்கப்படும் முறப்பநாடு தாமிரபரணி ஆற்று பகுதியிலும் வெள்ளசேதம் குறித்து ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகர குடிநீர் திட்டம்
இதுதவிர நெல்லை மாநகராட்சிக்கு 50 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் புதிய குடிநீர் திட்ட பணிகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது தலைமை பொறியாளர் மணிமோகன், மேற்பார்வை பொறியாளர் ராஜசேகர், முத்து பழனியப்பன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story