பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
அவினாசி,
அவினாசி அருகே பெண் வக்கீலிடம் நகை பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நகை பறிக்க முயற்சி
திருப்பரை அடுத்த அனுப்பர்பாளையத்தை சேர்ந்த இந்துமதி (வயது36) பெண் வக்கீல். இவர் கடந்த ஆகஸ்டு மாதம் அவினாசி கோர்ட்டிலிருந்து ஸ்கூட்டரில் அனுப்பர்பாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவினாசிலிங்கம்பாளையம் பிரிவு அருகே சென்றபோது இவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் இந்துமதி அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர்.
அப்போது நிலைதடுமாறி இந்துமதி கீழே விழுந்துள்ளார். இதைப் பார்த்த 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம வாலிபர்கள் 3பேரையும் தேடி வந்தனர்.
2 வாலிபர்கள் கைது
இந்த நிலையில் நேற்று அட்டையாம்பாளையம் நால்ரோட்டில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 வாலிபர்களை பிடித்து விசாரித்து கொண்டிருந்த நிலையில் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் 3 பேரும் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த முரளி என்ற ஜீவகுமார் (24), ராஜ்குமார் (22), இளங்கோ (27) என்பதும் பெண் வக்கீல் இந்து மதியிடம் நகை பறிக்க முயன்றதும் தெரியவந்தது. போலீசார் வழக்குபதிவு செய்து முரளி, மற்றும் ராஜ்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய இளங்கோவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story