பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுமா
பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுமா
தளி,
பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுமா?என்று சுற்றுலா பயணிகள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
பஞ்சலிங்க அருவி
உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு பாரப்பட்டியாறு குருமலைஆறு கிழவிப்பட்டி ஆறு உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது.
வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது. ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது.
வனப்பகுதியில் உள்ள மூலிகைகள் மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது அதில் தானாகவே கரைந்து விடுகிறது.இதன் காரணமாக அருவியில் விழுகின்ற தண்ணீர் அதிக சுவையுடன் நறுமணத்தையும் அளிக்கிறது.
குளிக்க அனுமதிக்க கோரிக்கை
அருவியில் குளிப்பதால் உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறுவதுடன் மன அழுத்தம் குறைந்து விடுகிறது. இதனால் அதில் குளித்து புத்துணர்வு வருவதற்காக வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர். இதனால் திருமூர்த்திமலை பகுதி உடுமலையின் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. கொரோனா பரவலுக்கு பின்பு அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்ற பயணிகள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள பாலாற்றில் குளித்துவிட்டு மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வடகிழக்கு மழையால் அருவியில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதுடன் நிலையான நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. எனவே பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story