வேளாங்கண்ணியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்


வேளாங்கண்ணியில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 5 Dec 2021 9:44 PM IST (Updated: 5 Dec 2021 9:44 PM IST)
t-max-icont-min-icon

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

வேளாங்கண்ணி:-

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினந்தோறும் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் தலைமையில் சுகாதாரத் துறை, போலீசார் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் சோதனை செய்யப்பட்டு, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் முககவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறி முகக்கவசம் வழங்கப்பட்டது. 

Next Story