பஸ்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி


பஸ்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி
x
தினத்தந்தி 5 Dec 2021 9:46 PM IST (Updated: 5 Dec 2021 9:46 PM IST)
t-max-icont-min-icon

பஸ்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி

அனுப்பர்பாளையம்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு தாறுமாறாக நிறுத்தப்படும் பஸ்களால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
4 தற்காலிக பஸ் நிலையங்கள்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கோவில்வழி, கலெக்டர் அலுவலகம் எதிரில், மாநகராட்சி அருகில், நொய்யல் பாலம் அருகில் என 4 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்த பஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.
 இந்த நிலையில் பழைய பஸ் நிலையத்தில் ஓரளவு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பஸ் நிலையத்தின் முன்புறம் பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கி செல்ல கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டது. 
போக்குவரத்து நெருக்கடி 
ஆனால் அரசு, தனியார், மினி பஸ் உள்ளிட்ட ஏராளமான பஸ்கள் பழைய பஸ் நிலையம் முன்பு பயணிகளை ஏற்றி, இறக்கி விட்டு உடனடியாக செல்லாமல் நீண்ட நேரம் அங்கேயே நிறுத்தப்படுகிறது. ஒருசில பஸ்களை டிரைவர்கள் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
பஸ் நிலையத்தின் முன்புறம் மேம்பாலம் இருப்பதால் குறுகிய இடமாக இருப்பதாலும், 3 சாலைகள் சந்திக்கும் பகுதி என்பதாலும் ஏற்கனவே போக்குவரத்து நெருக்கடிஏற்பட்டு வந்த நிலையில்தற்போது அதிக அளவு பஸ்களை அங்கு நிறுத்துவதால் நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. 
அதிகாரிகள் நடவடிக்கை
மேலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ரோட்டில் நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே பழைய பஸ் நிலையம் முன்பு பஸ்களை தாறுமாறாக நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பழைய பஸ் நிலைய கட்டுமான பணி முழுமையாக நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வரும் வரை தற்காலிகள் பஸ் நிலையங்கள் முழுமையாக செயல்படவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story