நெய்வேலி, விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது
நெய்வேலி, விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
நெய்வேலி,
நெய்வேலி டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது, சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று என்.எல்.சி. ஆர்ச்கேட் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் போலீசாரை பார்த்ததும், திரும்பிச் செல்ல முயன்றார். இதை பார்த்து உஷாரான போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர், பண்ருட்டியை அடுத்த குப்பம் கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் சுந்தரபாண்டியன்(வயது 27) என்பதும், நெய்வேலி, விழுப்புரம் பகுதிகளில் 6 மோட்டார் சைக்கிளை திருடி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுந்தரபாண்டியனை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டது. நெய்வேலி, விழுப்புரம் பகுதியில் மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபரை கைது செய்த டவுன்ஷிப் போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன், நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன் ஆகியோர் பாராட்டினர்.
Related Tags :
Next Story