குடிமங்கலம் அருகே புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல்


குடிமங்கலம் அருகே புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல்
x
தினத்தந்தி 5 Dec 2021 9:59 PM IST (Updated: 5 Dec 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலம் அருகே புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல்

குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே புதியதாக கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் மழை நீர் வீணாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தடுப்பணை 
நிலத்தடி நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. அதன்படி மழைநீர் சேகரிப்பு திட்டங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீர்ஓடைகள், ஆறுகள், நீர்வழித்தடங்கள் ஆகியவற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி மழை நீரை தேக்கி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 அந்த வகையில் குடிமங்கலத்தை அடுத்த மூங்கில்தொழுவு பகுதியில் உள்ள மழைநீர் ஓடையின் குறுக்கே கடந்த 2018-ம் ஆண்டு தடுப்பணை கட்டப்பட்டது. அந்த தடுப்பணையில் தற்போது விரிசல் ஏற்பட்டு பெருமளவு நீர் கசிந்து வீணாகி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 
விரிசல்
மேலும் இந்த விரிசல் படிப்படியாய் பெரிதாகி தடுப்பணை சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே தடுப்பணையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story