தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் மண் வள தினம் கொண்டாடப்பட்டது


தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் மண் வள தினம் கொண்டாடப்பட்டது
x
தினத்தந்தி 5 Dec 2021 10:02 PM IST (Updated: 5 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மீன்வள கல்லூரியில் மண் வள தினம் கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மண் வள தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் தலைமை தாங்கினார். மீன்வள விரிவாக்க பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் தலைவர் இரா.சாந்தகுமார் முன்னிலை வகித்தார். நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறை தலைவர் பா.பத்மாவதி வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மற்றும் அதை சுற்றி உள்ள பகுதியைச் சார்ந்த 29 மீன் பண்ணையாளர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மீன் பண்ணையாளர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீர்வளச் சூழலியல் மேலாண்மைத்துறையின் இணைப் பேராசிரியர் வே.ராணி நன்றி கூறினார்.
இதே போன்று இந்தியாவின் முதல் வேளாண் அமைச்சர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் டிசம்பர் 3-ம் தேதி வேளாண் கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் கல்வி தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இடையே 'இந்திய பொருளாதார மேம்பாட்டில் வேளாண் கல்வியின் பங்கு' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. தமிழ் பிரிவில் முதலாம் ஆண்டு மாணவர் எர்னெஸ்ட் முதல் பரிசையும், ஆங்கில பிரிவில் 3-ம் ஆண்டு மாணவர் மாதவ் முதல் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுஜாத்குமார் வழங்கினார். மாணவர் சங்க துணைத் தலைவர் சா.ஆதித்தன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

Next Story