கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் திடீர் விரிசல்


கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில் திடீர் விரிசல்
x
தினத்தந்தி 5 Dec 2021 10:44 PM IST (Updated: 5 Dec 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் அடுக்கம் மலைப்பாதையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானல்: 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில், கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கொடைக்கானல் அடுக்கம்-பெரியகுளம் மலைப்பாதையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டது. ராட்சத பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிக் கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்த மலைப்பாதையில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை  விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அடுக்கம், பாலமலை, தாமரைக்குளம் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் செல்வதற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்துள்ளது. 
இந்தநிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. 

இதன் காரணமாக கொடைக்கானல்-அடுக்கம் மலைப்பாதையில், குருடிகாடு என்னுமிடத்தின் அருகே சாலையின் நடுவே சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு திடீர் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும், ஆபத்தான இந்த மலைப்பாதையில் அப்பகுதி கிராம மக்கள் வாகனங்களில் சென்று வந்த வண்ணம் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த நெடுஞ்சாலை துறையினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று அந்த பகுதியில் எம்.சாண்ட் மண் மற்றும் ஜல்லி கற்களை நிரப்பி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பாதையில் விரிசல் ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story