மாவட்ட செய்திகள்

முதியவரின் கையில் கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் திருட்டு + "||" + 9 lakh theft by stabbing an elderly man in the hand

முதியவரின் கையில் கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் திருட்டு

முதியவரின் கையில் கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் திருட்டு
முதியவரின் கையில் கத்தியால் குத்தி ரூ.9 லட்சம் திருடி சென்று விட்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே மூக்குடியை சேர்ந்தவர் சுந்தரலிங்கம் (வயது 60). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுந்தரலிங்கம் நேற்று வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் வந்து சுந்தரலிங்கத்தை கத்தியால் கையில் குத்திவிட்டு, அவர்கள் கொண்டு வந்த மிளகாய் பொடியை அவரது முகத்தில் தூவியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவரது வீட்டின் பீரோவில் இருந்த ரூ.9 லட்சத்தை திருடி சென்று விட்டனர். படுகாயமடைந்த சுந்தரலிங்கம் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலின் பேரில் அறந்தாங்கி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருட்டு- மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
அந்தியூர், பெருந்துறை பகுதியில் நிதிநிறுவன அதிபர், ஆசிரியர் வீட்டில் நகை-பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2. பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சம் திருட்டு
சிவகாசியில் பீடி நிறுவனத்தில் ரூ.3 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
3. வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரம் திருட்டு
பெரம்பலூர் அருகே வீடு-மளிகை கடையில் ரூ.71 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4. நகை, பணம் திருட்டு
நகை, பணம் திருட்டு
5. வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு
வீடு புகுந்து 18 பவுன் நகை திருட்டு பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.