கள்ளக்குறிச்சியில் பஸ் மோதி முதியவர் பலி
கள்ளக்குறிச்சியில் பஸ் மோதி முதியவர் பலி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி அண்ணாநகரில் வசித்து வருபவர் கேசவலு(வயது 76). இவர் சம்பவத்தன்று அதே பகுதியில் உள்ள சேலம் மெயின்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மின்சார அலுவலகம் அருகில் வந்தபோது பின்னால் கள்ளக்குறிச்சியிலிருந்து ஏமப்பேர் நோக்கி அதிவேகமாக வந்த அரசு பஸ் கேசவலுவின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கேசவலு பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story