கடையடைப்பு போராட்டம்
11-ந் தேதி கடையடைப்பு போராட்டம் நடக்கிறது.
சிவகங்கை
சிவகங்கை வர்த்தகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் தலைவர் அறிவுதிலகம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் செயலாளர் வடிவேலு, பொருளாளர் சுகர்னோ, துணைத்தலைவர் முகமது இலியாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு சட்டக் கல்லூரி மற்றும் வேளாண்மை கல்லூரி தொடங்கப் படும் என்று அறிவித்ததற்கு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை நகரில் உள்ள ஒருங் கிணைந்த நீதிமன்றத்தில் பல்வேறு வகையான நீதிமன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. எனவே அரசு அறிவித்துள்ள புதிய சட்டக் கல்லூரியை சிவகங்கையில் தொடங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகை யில் மத்திய அரசால் சிவகங்கை அருகே ஸ்பைசஸ் பார்க் தொடங்கப்பட்டுஉள்ளது. இதன் அருகில் அரசு அறிவித் துள்ள சட்டம், வேளாண்மை கல்லூரியை தொடங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 11-ந் தேதி சிவகங்கையில் ஒரு நாள் கடை அடைப்பு போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
Related Tags :
Next Story