மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதல்; கல்லூரி மாணவர் பலி
x
தினத்தந்தி 5 Dec 2021 11:20 PM IST (Updated: 5 Dec 2021 11:20 PM IST)
t-max-icont-min-icon

மயிலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கன்டெய்னர் லாரி மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

மயிலம், -

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காலேஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் அக்பர் மகன் முகமது ரபிக் (வயது 22). இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தார். 
இவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மயிலம் அடுத்த விளங்கம்பாடி அருகே சென்றபோது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த  முகமது ரபிக் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

 இதுகுறித்து தகவலறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று முகமது ரபிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Tags :
Next Story