அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி


அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Dec 2021 11:23 PM IST (Updated: 5 Dec 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி

விருதுநகர், 
வெம்பக்கோட்டை அருகே உள்ள சிப்பிபாறை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவன ஊழியர். இந்நிலையில் இவரது உறவினர் திருவேங்கிடபுரத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவர் மூலம் செங்கல்பட்டு மாவட்டம் கானாத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை பெஞ்சமின் என்பவர் பழக்கம் ஏற்பட்டது. தனது மகன், மகளுக்கு அரசுப்பணி பெற்றுத்தர ஏழுமலை பெஞ்சமினிடம் தான் பணம் கொடுத்துள்ளதாக மாரியப்பன், கண்ணனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இதன் அடிப்படையில் கண்ணனும், ஏழுமலை பெஞ்சமினை தொடர்பு கொண்டு தனக்கும் அரசுப்பணி பெற்று தருமாறு கோரினார். அதற்கு அவர் ரூ. 3 லட்சம் தருமாறு கேட்டதன் பேரில் கண்ணன், ஏழுமலை பெஞ்சமின் வங்கி கணக்கில் அந்த பணத்தை செலுத்தியுள்ளார். இதையடுத்து விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகம் அருகே கண்ணனை வரச்சொல்லிய ஏழுமலை பெஞ்சமின் அவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளர் பணியிடத்திற்கான நியமன ஆணையை வழங்கி உள்ளார். அதை பெற்ற கண்ணன் கலெக்டர் அலுவலகம் சென்று நியமன ஆணையை காட்டிய போது அது போலி என தெரியவந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணன் இதுகுறித்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஏழுமலை பெஞ்சமின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story