தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு


தொழிலாளர்களிடம் பணம், செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2021 11:32 PM IST (Updated: 5 Dec 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

தொழிலாளர்களிடம் பணம், செல்போனை பறித்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம், 

மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டை அருகே கொரட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (வயது 22), தாயனூர் தோப்பு கிராமத்தை சேர்ந்தவர்கள் கார்த்திக் (21), ஞானசேகர் (25), சிவா (23). இவர்கள் 4 பேரும் சென்னையில் கட்டிட தொழிலாளர்களாக வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் வேலைக்காக 2 மோட்டார் சைக்கிள்களில் சென்னைக்கு புறப்பட்டனர். திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி எதிரே சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக அவர்கள் அங்கு நின்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர் கத்தி, அரிவாளை காட்டி அந்த 4 பேரையும் மிரட்டினர். மேலும் சம்பத்தின் மோட்டார் சைக்கிள், செல்போன், சிவாவின் செல்போன் மற்றும் இவர்கள் 2 பேரிடம் இருந்தும் ரூ.600 ஆகியவற்றை  பறித்து கொண்டு மர்மநபர்கள் 2 பேரும் தப்பிச்சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story