கொடுக்கல்-வாங்கல் தகராறில் மளிகை கடைக்காரருக்கு கத்திக்குத்து
கிருஷ்ணராயபுரம் அருகே கொடுக்கல்-வாங்கல் தகராறில் மளிகை கடைக்காரரை கத்தியால் குத்திய தொழிலாளியை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கிருஷ்ணராயபுரம்,
மளிகை கடைக்காரர்
கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பூவம்பாடியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும், மாடுகளை வளர்ந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (25), கூலி தொழிலாளி. இவருக்கும், பாண்டியனுக்கும் பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது.
கத்திக்குத்து
இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் சேங்கல் பால் சொசைட்டிக்கு பால் கொடுக்க பாண்டியன் சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த சதீஷ்குமார் அவரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
பின்னர் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியனின் கழுத்து உள்ளிட்ட பல்வேறு பகுதியில் சரமாரியாக குத்தினார்.
போலீசில் ஒப்படைப்பு
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சதீஷ்குமாரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய பாண்டியனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story