வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்


வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 6 Dec 2021 1:03 AM IST (Updated: 6 Dec 2021 1:03 AM IST)
t-max-icont-min-icon

வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே தாதம்பேட்டையில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆண்டாள், கருடாழ்வார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வரதராஜ பெருமாளுக்கும், பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. வைதீக முறைப்படி நிச்சயதாம்பூலம், மாலை மாற்றுதல், ஊஞ்சல் வைபவங்கள் நடைபெற்றன. மேலும் மங்கள வாத்தியங்கள் முழங்க, வேத, மந்திரங்கள் ஒலிக்க திருமண கோலத்தில் எழுந்தருளி சேவை சாதித்த நம்பெருமான், பெருந்தேவி தாயாருக்கு மாங்கல்ய தாரணம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கோவில் வளாகத்திற்குள் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் பிரதட்சணம் நடைபெற்றது. மங்கல தீபம் காண்பிக்கப்பட்டது. பின்னர் மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Next Story