கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு


கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
x
தினத்தந்தி 6 Dec 2021 1:09 AM IST (Updated: 6 Dec 2021 1:09 AM IST)
t-max-icont-min-icon

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. சம்பவத்தன்று இந்த கோவிலை பூசாரி தியாகராஜன் பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story