மதுரை-மானாமதுரை இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
மதுரை-மானாமதுரை இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார்.
மதுரை,
மதுரை-மானாமதுரை இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் ஆய்வு செய்தார்.
ரெயில்வே மின்வழிபாதை ஆய்வு
இதனை தொடர்ந்து சிலைமானில் உள்ள துணை மின் நிலையம், வழியில் இரு வளைவுகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மின் வழித்தட ஏற்பாடுகள், திருப்பாச்சேத்தி, மானாமதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயில் பாதையை குறுக்கிடும் 400 கிலோ வாட் தமிழக மின் வாரிய மின் வழித்தடத்தையும் ஆய்வு செய்தார்.
ேசாதனை ஓட்டம்
மேலும், மானாமதுரை ரெயில் நிலையத்தில் நடைமேடை, ரெயில்பாதை நடைமேம்பாலம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார். பின்பு ரெயில் வேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. மானாமதுரையில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ஆய்வு ரெயில் 100 கி.மீ. வேகத்தில் பயணித்து மாலை 3.27 மணிக்கு 37 நிமிடங்களில் மதுரை வந்து சேர்ந்தது.
இந்த ஆய்வின் போது, முதன்மை மின்வழி திட்ட இயக்குனர் சமீர் டிஹே, கூடுதல் கோட்ட ரெயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ், கோட்ட பாதுகாப்பு அதிகாரி மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story