5-ம் ஆண்டு நினைவு தினம்:ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் அஞ்சலி
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சேலம்:
சேலத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெயலலிதா நினைவு தினம்
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அ.தி.மு.க.வினரால் கடைபிடிக்கப்பட்டது. சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், மணி மண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர். உருவச்சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கட்சி நிர்வாகிகள் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
மலர்தூவி அஞ்சலி
இதைத்தொடர்ந்து மணி மண்டபம் முன்பு அஸ்தம்பட்டி பகுதி சார்பில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் கனகராஜ்,
பகுதி செயலாளர்கள் பாலு, மாரியப்பன், சரவணன், முருகன், சண்முகம், பாண்டியன், யாதவமூர்த்தி, ஜெகதீஷ்குமார், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் ஜான்கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளிலும் அந்தந்த பகுதிகளில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இளங்கோவன்
ஜெயலலிதா நினைவு நாளையொட்டி ஆத்தூர் கோட்டை பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஆத்தூர் நகர செயலாளர் மோகன் மற்றும் அ.தி.மு.க.வினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story