நெல்லையில் பரபரப்பு: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது


நெல்லையில் பரபரப்பு: கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 3:09 AM IST (Updated: 6 Dec 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது

நெல்லை:
நெல்லையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளநோட்டுகள்
நெல்லை பாளையங்கோட்டை கக்கன்நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 27). கட்டிட தொழிலாளி. இவரிடம், கீழநத்தம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (35) என்பவர் ரூ.10 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மகேஷ்குமார், ராஜாவிடம் ரூ.5 ஆயிரத்தை திரும்ப            கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்ற ராஜா பணத்தை பார்த்த போது அவை அனைத்தும் கள்ளநோட்டுகள் என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜா இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகேஷ் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர்.
7 பேர் கைது
அதில் மகேஷ் குமார் மற்றும் நெல்லை திருமலைகொழுந்து புரத்தைச் சேர்ந்த பிரவீன் (35), கரையிருப்பை சேர்ந்த ஆனந்த மணிகண்டன் (34), திருப்பணிகரிசல்குளத்தை சேர்ந்த நம்பிராஜன் (36), ஆழ்வார்திருநகரியை சேர்ந்த பூல்பாண்டி (32), தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்த முருகன் (33), கீழ நத்தத்தை சேர்ந்த கண்ணன் (35) ஆகிய 7 பேரும் சேர்ந்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 7 பேரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும் இவர்களுக்கு கள்ள நோட்டுகள் எப்படி வந்தது? இதில் மேலும் யாருக்காவது தொடர்பு உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட 7 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story