பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது


பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Dec 2021 3:31 AM IST (Updated: 6 Dec 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணிடம் நகை பறித்த 3 பேர் கைது

நெல்லை:
தென்காசியை சேர்ந்தவர் சித்திக் இஸ்மாயில். இவருடைய மனைவி சர்மிளா பாத்திமா (வயது 27). இவர் சம்பவத்தன்று பாளையங்கோட்டை மகாராஜ நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சர்மிளா பாத்திமா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், விஜயநாராயணம் அருகே உள்ள ஆண்டாள் குளத்தை சேர்ந்த முத்துக்குமார் (27), தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த அருண்குமார் (24), சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளத்தைச் சேர்ந்த செங்கான் (20) ஆகிய 3 பேரும் சேர்ந்து சர்மிளா பாத்திமாவின் தங்க நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் முத்துக்குமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.

Next Story