கடையநல்லூர் அருகே ஆட்டோ - மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்


கடையநல்லூர் அருகே ஆட்டோ - மோட்டார் சைக்கிள் மோதல்; சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Dec 2021 4:02 AM IST (Updated: 6 Dec 2021 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஆட்டோ மோட்டார் சைக்கிள் மோதல் சிறுவன் உள்பட 4 பேர் படுகாயம்

கடையநல்லூர்:
கடையநல்லூர் ரகுமானியாபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (வயது 47). இவர் மோட்டார்சைக்கிளில் தனது தோட்டத்திற்கு சென்று விட்டு கடையநல்லூருக்கு வந்து கொண்டிருந்தார்.  அட்டைகுளம் அருகே வந்தபோது அங்குள்ள பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளை திருப்பினார். அப்போது கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாடசாமி (54) என்பவர் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் அப்துல் ரகுமான் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் ஆட்டோவும் கவிழ்ந்ததில் டிரைவர் மாடசாமி, அதில் பயணம் செய்த கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சின்னத்தாய் (51), ஈஸ்வரன் (10) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர். உடனே படுகாயமடைந்த 4 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டோ, மோட்டார்சைக்கிள் மோதிய விபத்து காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story