நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா முதியவர் பலி


நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா முதியவர் பலி
x
தினத்தந்தி 6 Dec 2021 10:56 AM IST (Updated: 6 Dec 2021 10:56 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா முதியவர் பலி

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளார்.
41 பேருக்கு கொரோனா
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,674 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் பிற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வந்த 4 பேரின் பெயர் நாமக்கல் மாவட்ட பட்டியலுடன் இணைக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 53,678 ஆக அதிகரித்தது. இதற்கிடையே நேற்று புதிதாக 41 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 719 ஆக அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நேற்று 51 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இம்மாவட்டத்தில் இதுவரை 52,721 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 488 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முதியவர் பலி
நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 509 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது முதியவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார். இதனால் இம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 510 ஆக அதிகரித்து உள்ளது.

Next Story