புதுச்சேரி முன்னாள் அமைச்சரின் மருமகனிடம் ரூ.6¼ கோடி மோசடி; போலீசார் விசாரணை
சென்னை பெரியமேடு போலீஸ் நிலையத்தில், பிரவீன் அலெக்சாண்டர் மற்றும் அவரது நண்பர்கள் கவுதம், கணேசகுமார் ஆகியோர் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர்.
அந்த புகார் மனுவில், குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி தருவதாக கூறி சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்ட 4 பேர் ரூ.6.30 கோடி பணம் வாங்கி விட்டு ஏமாற்றி விட்டனர் என்றும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் கூறப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனு தொடர்பாக வேப்பேரி இன்ஸ்பெக்டர் கண்ணன் (பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு) வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். புகார் கூறப்பட்ட 4 பேரிடமும் விசாரணை நடக்கிறது. புகார் கொடுத்துள்ள பிரவீன் அலெக்சாண்டர், புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஒருவரின் மருமகன் ஆவார்.
Related Tags :
Next Story