கூவம் ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு


கூவம் ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 6 Dec 2021 7:39 PM IST (Updated: 6 Dec 2021 7:39 PM IST)
t-max-icont-min-icon

கூவம் ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்த பிரேம்குமார் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானார்.

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் கசவநல்லாத்தூர், வைஷாலி நகரைச் சேர்ந்தவர் ஜாவித் (வயது 21). இவர் நேற்று தனது நண்பரான ஆவடியைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (20) என்பவருடன் பிஞ்சிவாக்கம் அருகே கூவம் ஆற்றின் தடுப்பணையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது நீச்சல் தெரியாத பிரேம்குமார் திடீரென நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் மாயமானார்.

இதைக் கண்ட அவரது நண்பரான ஜாவித் கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பிரேம்குமாரை தேடினார்கள்.

இதனைத்தொடர்ந்து தடுப்பணையில் இருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கிடந்த பிரேம்குமாரை மீட்டு, கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சேர்த்தனர்.

அங்கு பிரேம்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கடம்பத்தூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story