2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து


2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து
x
தினத்தந்தி 6 Dec 2021 8:24 PM IST (Updated: 6 Dec 2021 8:24 PM IST)
t-max-icont-min-icon

நடுவட்டம் அருகே முன்விரோதத்தில் நடந்த தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக மெக்கானிக் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கூடலூர்

நடுவட்டம் அருகே முன்விரோதத்தில் நடந்த தகராறில் 2 வாலிபர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக மெக்கானிக் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்விரோதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட டி.ஆர்.பஜார் உட்புரூக் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 30). இவரது உறவினர் வெள்ளையன்(32). இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த மெக்கானிக் பிரசாந்த்(24) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. 

இந்த நிலையில் வெள்ளையன், சுரேஷ்குமார் ஆகியோரை சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று பிரசாந்த் மற்றும் அவரது தம்பி பிரகாஷ், நண்பர் சசி ஆகியோர் டி.ஆர்.பஜார் அணை அருகே உள்ள பாலத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. இதை ஏற்று அவர்களை நேற்று முன்தினம் இரவில் வெள்ளையன், சுரேஷ்குமார் ஆகியோர் சந்தித்தனர்.

கத்திக்குத்து

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷ்குமாரை சரமாரியாக குத்தினார். இதை வெள்ளையன் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் 2 பேரும் பலத்த காயமடைந்தனர். தொடர்ந்து அங்கிருந்து பிரசாந்த், பிரகாஷ், சசி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து அந்த வழியாக வந்தவர்கள் சுரேஷ்குமார், வெள்ளையனை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சுரேஷ்குமார் மட்டும் மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் மேப்பாடியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 

3 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் வழக்குப்பதிவு செய்து மெக்கானிக் பிரசாந்த், அவரது தம்பி பிரகாஷ், நண்பர் சசி ஆகியோரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் நடுவட்டம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story