ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல்


ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 6 Dec 2021 8:37 PM IST (Updated: 6 Dec 2021 8:37 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் ஈக்காடு அருகே கல்யாண குப்பம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் உபரிநீர் கால்வாய் வழியாக வெளியேற்றப்படுகிறது. கால்வாய் பகுதியில் ஆக்கிரமிப்பு உள்ளதால் உபரிநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பை அகற்ற பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது அந்த பகுதியில் வசித்து வந்த சாந்தி என்பவர் பொதுப்பணித்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செல்வகுமார் திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக சாந்தி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story