ரெயில் மூலம் 1½ லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது


ரெயில் மூலம் 1½ லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 6 Dec 2021 9:13 PM IST (Updated: 6 Dec 2021 9:13 PM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடியில் இருந்து ஜெய்பூருக்கு ரெயில் மூலம் 1½ லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

மன்னார்குடி:
மன்னார்குடியில் இருந்து ஜெய்பூருக்கு ரெயில் மூலம் 1½ லட்சம் முட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டது. 
1½ லட்சம் முட்டைகள்
நாமக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தற்போது முட்டை உற்பத்தி அதிகரித்துள்ளது. இதையடுத்து வெளிமாநிலங்களுக்கு முட்டைகள் வாகனங்கள் மற்றும் ெரயில்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.  நாமக்கல் பகுதியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு கொண்டு செல்வதற்காக 750 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1½ லட்சம் முட்டைகள் 3 லாரிகள் மூலம் மன்னார்குடி ெரயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது. பின்னர் மன்னார்குடியில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் செல்லும் பயணிகள் ெரயிலில் 2 பெட்டிகளில் முட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. 
ஆய்வு 
முட்டைகள் ஏற்றும் பணிகளை ெரயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மன்னார்குடி ெரயில் நிலையத்தில் இருந்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சரக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டு நெல் மற்றும் அரிசி மூட்டைகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. தற்போது முட்டையும் வெளிமாநிலத்திற்கு அனுப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  மன்னார்குடி ெரயில் நிலையத்தில் இருந்து 10½ டன் எடைகொண்ட 750 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 1½ லட்சம் முட்டைகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்புவது மூலம் ெரயில்வேக்கு  ரூ.1 லட்சம் வருவாய் கிடைக்கும். மேலும் ராஜஸ்தான் மாநிலத்திற்கு முட்டைகள் அனுப்பப்படுவதன் மூலம் ஆண்டிற்கு ரூ.50 லட்சம் வருவாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story