ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கி 2 பேர் படுகாயம்


ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கி 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:31 PM IST (Updated: 6 Dec 2021 10:31 PM IST)
t-max-icont-min-icon

ஆண்டிப்பட்டி அருகே கரடி தாக்கி 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா திம்மரசநாயக்கனூர் அருகே உள்ள மல்லையாபுரத்தை சேர்ந்தவர்கள் மணி (வயது 60), ராஜப்பன் (63). இவர்கள் 2 பேரும் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அவர்கள் 2 பேரும் நேற்று வழக்கம்போல் மல்லையாபுரம் அருகே சின்னமலை பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தனர். 
மாலை 6.30 மணி அளவில் மேய்ச்சலை முடித்துவிட்டு மீண்டும் ஆடுகளை மல்லையாபுரம் நோக்கி அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது மலைப்பகுதியில் மறைந்திருந்த கரடி ஒன்று அவர்களை மறித்தது. மேலும் அந்த கரடி, மணி மற்றும் ராஜப்பனை தாக்க தொடங்கியது. கரடியிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அந்த விரட்டி சென்று தாக்கியது. இதனால் 2 பேரும் அபயகுரல் எழுப்பினர். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து, கரடியை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். 
இதில், மணி, ராஜப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story