நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்


நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்
x
தினத்தந்தி 6 Dec 2021 10:56 PM IST (Updated: 6 Dec 2021 10:56 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 20 காசுகள் உயர்வு 485 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் உயர்ந்து, 485 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
முட்டை விலை உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 465 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 20 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக உயர்ந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-505, ஐதராபாத்-470, விஜயவாடா-489, மைசூரு-497, மும்பை-530, பெங்களூரு-495, கொல்கத்தா-540, டெல்லி-555.
கறிக்கோழி
கறிக்கோழி கிலோ ரூ.99-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.102 ஆக உயர்ந்து உள்ளது. 
முட்டைக்கோழி கிலோ ரூ.75-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.80 ஆக அதிகரித்து உள்ளது.
பண்ணையாளர்கள் மகிழ்ச்சி
வடமாநிலங்களில் குளிர் அதிகரித்து இருப்பதால் அங்கு முட்டை விற்பனை அதிகரித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு அனுப்பப்படும் முட்டைகளின் அளவு கணிசமாக உயர்ந்து உள்ளது. இதேபோல் தமிழகத்தில் மழை சற்று குறைந்து இருப்பதாலும், கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வருவதாலும் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதுவே விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் முட்டை கொள்முதல் விலை 35 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story