கனமழையால் முழு கொள்ளளவை எட்டிய கல்லடை குளம்


கரூர்
x
கரூர்
தினத்தந்தி 6 Dec 2021 11:00 PM IST (Updated: 6 Dec 2021 11:00 PM IST)
t-max-icont-min-icon

தோகைமலை பகுதியில் பெய்த கனமழையால் கல்லடை குளம் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் உபரிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை
கல்லடை குளம்
கரூர் மாவட்டம், தோகைமலை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் குளம் நிரம்பி ஆற்றுவாரிகளில் உபநீர் வெளியேறி வருகிறது. நேற்று தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. 
இதனால் கல்லடை குளம் முழு கொள்ளளவை எட்டி மேலவெளியூர் ஆற்றுவாரியில் தோகைமலை-திருச்சி மெயின் ரோட்டில் குறுக்கே உள்ள தரைப்பாலத்தின் வழியாக உபரிநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
போக்குவரத்து பாதிப்பு
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் விஷபாம்புகள், பூச்சிகள் அதிகளவில் தண்ணீரில் செல்கிறது.  
இதனால் பொதுமக்கள் அந்த வழியாக செல்வதற்கு மிகவும் அஞ்சுகின்றனர். மேலும் ஆற்றுவாரியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. எனவே தரைப்பாலத்திற்கு பதிலாக மழைநீர் வெளியேற பெரிய பாலம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story