குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது


குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல். 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 12:02 AM IST (Updated: 7 Dec 2021 12:02 AM IST)
t-max-icont-min-icon

குடோனில் பதுக்கி வைத்திருந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்

வேலூர்

வேலூர் லாங்குபஜாரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகள் மற்றும் குடோன்களில் சோதனை செய்தனர். 

அப்போது ஒரு குடோனில் மூட்டைகளில் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வேலூர் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்த சுமேர் (வயது 32), கிஷோர் (32), ஜித்தந்தர் (28) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story