தொழில் அதிபரின் அலுவலக ஊழியர்களிடம் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை


தொழில் அதிபரின் அலுவலக ஊழியர்களிடம் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 7 Dec 2021 12:03 AM IST (Updated: 7 Dec 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தொழில் அதிபரின் அலுவலக ஊழியர்களிடம் மத்திய அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

புதுக்கோட்டை
புதுக்கோட்டையை சேர்ந்த தொழில் அதிபர் எஸ்.ராமச்சந்திரன். இவர் முன்பு மணல் குவாரிகள் நடத்தி வந்தார். தற்போது குவாரி உள்பட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டு தொழில்அதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது ராமச்சந்திரனின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது. 
இந்தநிலையில் புதுக்கோட்டை நிஜாம் காலனியில் தொழில்அதிபர் ராமச்சந்திரனின் அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் நேற்று மத்திய அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையின்போது அலுவலகத்திற்குள் வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
ஆவணங்கள்
அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து திருச்சி வந்து, அங்கு வருமானவரித்துறை அலுவலகத்தில் இருந்து புதுக்கோடடைக்கு காரில் புறப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. அவர்கள் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையை சேர்ந்தவர்கள் என தகவல்கள் மாறி, மாறி கூறப்பட்டன. 
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அடிப்படையில் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது. அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்திவிட்டு நேற்று இரவு 7 மணி அளவில் புறப்பட்டு சென்றனர். இந்த விசாரணையால் புதுக்கோட்டையில்  பரபரப்பு ஏற்பட்டது.


Next Story