ஒன்றியக்குழு கூட்டத்தை துணைத்தலைவர் உள்பட 14 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


ஒன்றியக்குழு கூட்டத்தை துணைத்தலைவர் உள்பட 14 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 12:37 AM IST (Updated: 7 Dec 2021 12:37 AM IST)
t-max-icont-min-icon

ஒன்றியக்குழு கூட்டத்தை துணைத்தலைவர் உள்பட 14 கவுன்சிலர்கள் புறக்கணிப்பு

தொட்டியம், டிச.7-
தொட்டியம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.வை சேர்ந்த புனிதராணி பதவி வகிக்கிறார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பாபுசத்தியமூர்த்தி துணைத்தலைவராக பதவி வகிக்கிறார்.தி.மு.க, அ.தி.மு.க, தே.முதி.க, ம.தி.மு.க, சுயேச்சை என 16 பேர் ஒன்றிய கவுன்சிலர்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில் ஒன்றியக் குழுவின் சாதாரண குழுக்கூட்டம் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கூட்டம் தொடங்கும் முன்பே ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாபுசத்தியமூர்த்தி தலைமையில் 14-ஒன்றிய கவுன்சிலர்கள் ஒன்றிய குழுத் தலைவர் புனிதராணி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர வேண்டி ஒன்றிய ஆணையர் ஞானமணியிடம் மனு கொடுத்தனர். பின்னர் துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் முசிறியில் உள்ள கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பதற்காக ஒன்றிய குழு கூட்டத்தை புறக்கணித்து விட்டு ஒன்றிய அலுவலகத்தை விட்டு முசிறி புறப்பட்டு சென்றனர். அப்போது கூட்ட அரங்கில் ஒன்றிய குழுத்தலைவர் புனிதராணி மற்றும் அவரது ஆதரவு கவுன்சிலர்களுடன் அமர்ந்திருந்தார். ஆனால் கூட்ட அரங்கிற்கு ஒன்றிய குழு துணை தலைவர் பாபுசத்தியமூர்த்தி உள்ளிட்ட ஒன்றிய கவுன்சிலர்கள் 14 பேரும் கலந்து கொள்ளாததால் ஒன்றியக்குழு தலைவர் புனித ராணி மற்றும் மூன்று பெண் கவுன்சிலர்களும் கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர். துணைத் தலைவர் மற்றும் ஒன்றியகவுன்சிலர்கள் ஒன்றியக் குழுக் கூட்டத்தை புறக்கணிப்பது இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒன்றிய அலுவலக வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.

Next Story