வாடகைக்கு வீடு எடுத்து விபசாரம்; வாலிபர் கைது
வாடகைக்கு வீடு எடுத்து விபசாரத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
பாளையங்கோட்டை அருகே கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக சிவந்திப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த 3 ஆண்கள் தப்பியோடினர். அவர்களில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் மூலைக்கரைப்பட்டி சுந்தர விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சின்னத்துரை (வயது 29) என்பதும், கிருஷ்ணாபுரம் செல்லத்துரை நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபசாரம் நடத்தியதும் தெரிய வந்தது. இதையடுத்து சின்னத்துரையை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த 3 பெண்களை மீட்டு நாங்குநேரியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story