ஆடு மேய்த்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு


ஆடு மேய்த்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2021 1:08 AM IST (Updated: 7 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

ஆடு மேய்த்த பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த மணியின் மனைவி ஜெகதாம்பாள்(வயது 57). இவர் நேற்று மாலை ஆதனூர் சீராநத்தம் சாலையில் உள்ள தனது விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெகதாம்பாள் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலி மற்றும் காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடு ஆகியவற்றை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இது குறித்து ஜெகதாம்பாள் மருவத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story