சென்னீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
சென்னீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது.
ஜெயங்கொண்டம்:
கார்த்திகை மாதத்தில் வருகிற ஒவ்வொரு திங்கட்கிழமையும் சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. அன்றைய தினம் சிவ வழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. அதன்படி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள சென்னீஸ்வரர் கோவிலில் கார்த்திகை 3-வது சோம வாரத்தையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக யாக சாலைகள் அமைக்கப்பட்டு, சிவனடியார்கள் மூலம் தமிழ் முறைப்படி தேவாரம், திருவாசகங்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து 108 சங்குகளுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து, தீபாராதனை காண்பித்தனர். பின்னர் சங்குகளை கொண்டு கருவறையில் உள்ள லிங்கத் திருமேனிக்கு பக்தர்களே நேரடியாக சென்று அபிஷேகம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story