இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவிப்பு
சாத்தூர் அர்ச்சுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளதால் இருக்கன்குடி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
சாத்தூர்
சாத்தூர் அர்ச்சுனா நதியில் வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளதால் இருக்கன்குடி கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
பெருக்கெடுத்த வெள்ளம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடியில் வைப்பாறு- அர்ச்சுனா ஆறுகள் சந்திக்கும் இடத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு வாரத்தின் அனைத்து நாட்களிலும் அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
தென்மாவட்டங்களில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் இருக்கன்குடியில் உள்ள அர்ச்சுனா ஆற்று பகுதியை கடந்து தான் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஆனால் கடந்த சில தினங்களாக விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இருக்கன்குடி அணை முழு கொள்ளவை எட்டியது. அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் அர்ச்சுனா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஏமாற்றம்
இதன் காரணமாக ஆற்றை கடந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகின்றனர். எனவே கோவிலுக்கு செல்லும் வகையில் பொதுப்பணித்துறையினர் அந்த பகுதியில் பாலம் அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story