வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்


வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 7 Dec 2021 2:21 AM IST (Updated: 7 Dec 2021 2:24 AM IST)
t-max-icont-min-icon

வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம்

சாத்தூர்
திருச்செங்கோடு பி.குமாரபாளையத்தை சேர்ந்தவர் கவுரிசங்கர் (வயது 39). இவர் குடும்பத்துடன் வேனில் திருஉத்தரகோசமங்கை, ராமேசுவரம், திருச்செந்தூர் என கோவில்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது. கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் முடித்துவிட்டு ஊர் திரும்பும் வழியில் நேற்று முன்தினம் கோவில்பட்டி-சாத்தூர் நான்கு வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தனர். சாத்தூர் புதுப்பாளையம் சங்கரேஸ்வரி கோவில் அருகே வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் வேன் டிரைவர் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் உதவியுடன் படுகாயம் அடைந்தவர்களை தனியார் ஆம்புலன்ஸ் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கவுரி சங்கர் கொடுத்த புகாரின் பேரில் சாத்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story