கல்வீசிய வாலிபர் கைது


கல்வீசிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 7 Dec 2021 3:09 AM IST (Updated: 7 Dec 2021 3:09 AM IST)
t-max-icont-min-icon

மாநகராட்சி லாரி மீது கல்வீசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 
மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 43). இவர் மதுரை மாநகராட்சி குப்பை லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று குப்பை லாரியை முத்துப்பட்டி மெயின் ரோட்டில் ஓட்டி சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அந்த லாரி கண்ணாடியை கல்வீசி தாக்கினார். இது குறித்து சரவணன் சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் முத்துப் பட்டியை சேர்ந்த ஜெகதீஸ்குமார் (33) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story