ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்வு:சேலத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்-மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போட்டியின்றி தேர்வு:சேலத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்-மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 7 Dec 2021 3:38 AM IST (Updated: 7 Dec 2021 3:38 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு சேலத்தில் அ.தி.மு.க.வினர் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சேலம்:

கொண்டாட்டம்
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜி.வெங்கடாஜலம் தலைமையில் ஏராளமானவர்கள் நேற்று மாலை அண்ணா பூங்கா முன்பு திரண்டனர்.
பின்னர் நிர்வாகிகள் அங்கிருக்கும் மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது உருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதற்கு பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
இனிப்பு வழங்கினர்
தொடர்ந்து மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் மற்றும் நிர்வாகிகள் பஸ்களில் வந்த பயணிகள், பொதுமக்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், மாநகர் மாவட்ட அவை தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜூ, சக்திவேல், ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநகர் மாவட்ட செயலாளர் கனகராஜ், பகுதி செயலாளர்கள் யாதவமூர்த்தி, பாலு, சண்முகம், மாரியப்பன், பாண்டியன், செவ்வாய்பேட்டை நகர கூட்டுறவு வங்கி தலைவர் ராம்ராஜ், நகர கூட்டுறவு வங்கி தலைவர் வேபிரிட்ஜ் ராஜேந்திரன், மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜான்கென்னடி, சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சதீஷ்குமார், சேலம் மாநகர், மாவட்ட வக்கீல் பிரிவு நிர்வாகிகள் வீரகுமார், கலைச்செல்வி, வி.எஸ்.விவேகானந்தன், கண்ணன், சரவணன், முன்னாள் கவுன்சிலர் பொன்னி பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story