எலக்ட்ரீசியன் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை


எலக்ட்ரீசியன் அரிவாளால் சரமாரி வெட்டிக்கொலை
x

குளச்சல் அருகே எலக்ட்ரீசியனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை ெசய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

குளச்சல்:
குளச்சல் அருகே எலக்ட்ரீசியனை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை ெசய்த மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
எலக்ட்ரீசியன்
குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை மின்வாரிய அலுவலகம் பகுதியை சேர்ந்தவர் குமார் லிங்கம் (வயது 48), எலக்ட்ரீசியன். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று இரவு குமார் லிங்கம் வீட்டில் இருந்தார். அப்போது, திடீரென ஒரு கும்பல் அவருடைய வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தது. பின்னர் அந்த கும்பல், குமார் லிங்கத்திடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி அவரை அங்குள்ள சாலை பகுதிக்கு அழைத்து வந்தது.
அரிவாளால் வெட்டிய கும்பல்
அப்போது, நடந்த பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் குமார் லிங்கத்தை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றது.  
இதில் நிலைகுலைந்த குமார் லிங்கம் ரத்த வெள்ளத்தில்  சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதைகண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுபற்றி குளச்சல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 
துணை சூப்பிரண்டு விசாரணை
இதற்கிடையே படுகாயமடைந்த குமார் லிங்கம் சம்பவ இடத்திலேயே துடித்துடித்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த குளச்சல் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  
பின்னர், கொலை செய்யப்பட்ட குமார் லிங்கத்தின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 
காரணம் என்ன?
இந்த சம்பவம் குறித்து குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமார் லிங்கம் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன ? என தீவிர விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.
எலக்ட்ரீசியனை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story