மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை


மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2021 3:57 AM IST (Updated: 7 Dec 2021 3:57 AM IST)
t-max-icont-min-icon

மீனவர் தூக்குப்போட்டு தற்கொலை

குளச்சல்:
குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவருடைய மகன் குமார் (வயது 35). இவருக்கு விஜிதா என்ற மனைவியும், 5 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ெவளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வந்த குமார் கடந்த மாதம் 16-ந்தேதி சொந்த ஊர் திரும்பினார்.
 இந்தநிலையில் நேற்று மதியம் விஜிதா மகனுக்கு பள்ளிச்சீருடை வாங்கி வர மணவாளக்குறிச்சிக்கு சென்று விட்டார். அப்போது, குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்கு திரும்பி வந்த விஜிதா, கணவர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர், இதுபற்றி குமாரின் தந்தை ஸ்டீபன் குளச்சல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story