கிருஷ்ணகிரியில் 110 பேருக்கு ரூ11 17 லட்சம் நலத்திட்ட உதவிகள்
கிருஷ்ணகிரியில் 110 பயனாளிகளுக்கு ரூ 11 17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் 110 பயனாளிகளுக்கு ரூ.11.17 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நல உதவிகள்
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், மாவட்ட முஸ்லிம் மகளிர் மற்றும் உதவும் சங்கத்தின் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் பழம் மற்றும் காய்கறி வியாபாரம் செய்யவும், திருமண உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக தலா ரூ.9,500 வீதம் 106 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பிலும் வழங்கப்பட்டது.
நல உதவிகள்
இதேபோல தமிழ்நாடு வக்பு வாரியத்தில் பதிவு செய்த நிறுவனங்களில் பணியாற்றும் உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு புதிய இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தில் தலா ரூ.25 ஆயிரம் வீதம் 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சம் மதிப்பில் காசோலைகள் என மொத்தம் 110 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 17 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும் பாம்பு கடித்து உயிரிழந்த போச்சம்பள்ளியை சேர்ந்த அஜய்யின் தாயார் சந்திரலேகாவிற்கு, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலை, முன்கள பணியாளராக பணியாற்றி, கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்த தளி இளநிலை வருவாய் ஆய்வாளர் வினய்யின் மனைவி நிர்மலாவிற்கு, முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து காசோலையும் வழங்கப்பட்டது.
மேலும் மழையினால் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த சூளகிரி அடுத்த சிகரலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நந்தீஸ்சின் தந்தை ராஜசேகரிடம், பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலையும் என மொத்தம் ரூ.32 லட்சம் மதிப்பிலான காசோலையும் வழங்கப்பட்டது.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story